இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் சீனா சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை குவிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ தளபதிகள் கடந்த 23 மற்றும் 24ஆம் தேதியன்று எல்லைப் பகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இரு நாட்டின் எல்லைப் பகுதியாகக் கருதப்படும் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசமும் மேற்கொள்ள விரும்பாத இந்திய ராணுவத்தினர், நிலையை சீர் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
முன்னதாக இந்திய ராணுவத் தளபதிகள் இந்த விவகாரம் குறித்து தொடர் ஆலோசனை மேற்கொள்வதாகவும், பிரதமரும் இவ்விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய - சீன உரசல்: பின்னணியில் உள்ள 10 காரணிகள்