விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவரின் மனைவி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். தனது மனைவியைப் பார்க்க மருத்துவர் கடந்த வாரம் கிருஷ்ணகிரி வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவரது மனைவி, மனைவியின் தாய் தந்தை என அவருடன் தொடர்புகொண்ட ஒன்பது நபர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட நபர்கள் அனைவரும் சரியான மருத்துவ வழிகாட்டுதலுடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பீதியடைய வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.