சென்னை: அக்டோபர் 6ஆம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்ற 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம்பேர் ஆதரவு தந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் அக் 6ஆம் தேதி அன்று அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவாக தெரிந்துவிடும் என்பதால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு