உத்தரப் பிரதேசம்: தியோரியா மாவட்டம் பாகல்பூர் தொகுதியின் முரசோ கிராமத்தில் வசிக்கும் ராம்சுமர் யாதவின் மகன் அங்கேஷ். இவருக்கு 10 வயது இருக்கும்போது பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அங்கேஷை அவரது குடும்பத்தினர் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது உடலை வாழைத்தண்டில் வைத்து சரயு ஆற்றில் வீசியுள்ளனர். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுவனை ஆற்றில் வீசிய நிலையில் அவர் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அங்கேஷ் கூறுகையில், 'எனக்கு எதுவும் தெரியாது. சுயநினைவு திரும்பியதும், பீகார் மாநிலம் பாட்னா அருகே பாம்பு மந்திரி அமன் மாலி என்பவர் என்னை குணப்படுத்தியதை அறிந்தேன். அவர் தான் என்னை வளர்த்தார். கதிஹாரில் சில நாட்கள் என்னை வைத்திருந்தார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தேன்” என்றார்.
பின்னர், தனது நேர்ந்த சம்பவம் குறித்து ஒரு டிரக் டிரைவரிடம் அவர் விவரித்தபோது, டிரக் டிரைவர் அங்கேஷை அவரது சொந்த ஊர் செல்ல உதவிய நிலையில் பல போராட்டங்களுக்குப் பின்னர் அங்கேஷ் தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவரை கண்ட குடும்பத்தினர் பெரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: என் அப்பா படிக்கலைன்னா நானும் படிக்கக் கூடாதா..? கலெக்டர் ஆபிஸில் கண்ணீருடன் சாதி சான்று கேட்ட மாணவி