ETV Bharat / bharat

ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளம்பெண் கொலை: கொன்ற காதலனைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் - குற்றச் செய்திகள்

ஹைதரபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளம்பெண் கொலை வழக்கில், அவரைக் கொன்ற அவரது காதலனைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

young woman murder case look out notice given to finding her boy friend

author img

By

Published : Jun 25, 2023, 10:08 AM IST

பெங்களூரு(கர்நாடகா): பெங்களூரு மாநகர காவல் துறை, காதலியை கொன்றுவிட்டு தப்பிய இளைஞரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டு, அவரைப் பிடிக்க முயன்று வருகிறது. டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்பிட் கரி அவரை காதலித்துவந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான அகன்க்‌ஷா என்பவரை கொன்றுவிட்டு, தப்பியுள்ளார். இதனால், பெங்களூரு மாநகரின் ஜீவன் பீமா நகர் காவல் துறையினர், குற்றவாளியான ஆர்பிட் கரி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.

நடந்தது என்ன?: ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அகன்க்‌ஷா மற்றும் டெல்லியைச் சார்ந்த ஆர்பிட் இருவரும் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும், இணைந்து ஜீவன் பீம நகரில் உள்ள கொதிஹல்லி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்தனர்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி, ஆர்பிட் அகன்க்‌ஷாவிடம் வந்து, தன் மீது காட்டும் மிதமிஞ்சிய அன்புத்தொல்லை குறித்து சண்டையிட்டார். ஒருகட்டத்தில், ஆர்பிட் அகன்க்‌ஷாவின் கழுத்தை நெரித்து, அவரது இறப்புக் காரணமானார். பின்னர், அகன்க்‌ஷாவின் உடலை தூக்கில் தொங்கி உயிரிழந்ததுபோல், சித்தரித்தார். பின்னர், எதுவும் நடக்காததுபோல் அந்த அறையில் தப்பியுள்ளார். ஆனால், தவறுதலாக, ஆர்பிட் தனது செல்போனை, தனது காதலி இருந்த அறையில் வைத்துச் சென்றார். இதனால், காவல்துறையினர் அந்த செல்போனை அடிப்படையாகக் கொண்டு, தேடி வருகின்றனர்.

அகன்க்‌ஷாவின் மற்றொரு ரூம் மேட், அந்த அறைக்குள் நுழைந்தபோது, அகன்க்‌ஷா கொலையுண்டது தெரியவந்தது. பின்னர், அவர் இந்த உயிரிழப்பு குறித்து, ஜீவன் பீம நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின், ஜீவன் பீம நகர் காவல் நிலையத்தினர் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, குற்றவாளி ஆர்பிட்டின் குடும்ப உறுப்பினர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் இதைப் பற்றி விசாரித்துள்ளனர். இருப்பினும், ஆர்பிட் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம், சோனார்பூரைச் சேர்ந்த தும்பா என்னும் பெண் காணாமல் போன வழக்கில், அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில், சோனார்பூர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 2020ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு 3 வருடத்திற்குப் பின், புலனாய்வு அமைப்பு மூலம் துப்பு துலக்கி, அப்பெண்ணை, அவரது கணவரே கொன்று செப்டிக் டேங் உள்ளே போட்டது என சமீபத்தில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா கொலைவழக்கில், அவரது காதலன் கைது செய்யப்பட்டது நாட்டையே அதிர்வடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியவர் கருணாநிதி - எ.வ.வேலு பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.