ETV Bharat / bharat

IPL Auction 2024 : ஐபிஎல் தொடரை கலக்கப் போகும் சென்னை அணி! வீரர்கள் முழு லிஸ்ட் இங்கே!

ஐபிஎல் மினி ஏலம் நிறைவு பெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து உள்ள அணியில் முழு விபரம் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 10:35 PM IST

துபாய் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் முதல் மே வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தொடருக்கு முன்னதாக வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று (டிச. 19) நடைபெற்றது.

நட்சத்திர வீரர்களை ஏலம் எடுப்பதில் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. நடப்பு ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அண்மையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கைப்பற்றிய நிலையில், உலக கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது.

சென்னையில் அணி எப்போதும் போலவே அனைவரும் எதிர்பார்த்த அளவில் சிறந்த வீரர்களை வாங்கி, சரியான விலைக்கு வாங்கி குவித்து உள்ளது. அதேநேரம் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், ஷாருக்கான் உள்ளிட்ட தமிழக வீரர்களை ஏலம் எடுக்காமல் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுத்தது ரசிகர்களிடையே சற்று பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜொலித்த நியூசிலாந்து இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை 1 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. அவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூரை 4 கோடி ரூபாய்க்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சலை 14 கோடி ரூபாய்க்கும் வாங்கி உள்ளது.

வருடத்திற்கு ஒரு புதுமுக வீரரை களமிறக்குவதை நோக்கமாக கொண்ட சென்னை நடப்பு சீசனில் 20 வயதான உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி என்பவரை 8 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி உள்ளது. அணியில் அம்பதி ராயுடுக்கான இடத்தை நிரப்ப சமீர் ரிஸ்வி ஏதுவான வீரர் எனக் கூறப்படுகிறது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களையும் சேர்த்து தற்போது சென்னை அணியில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் : ருத்ராஜ், ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே.

ஆல் ரவுண்டர்கள் : ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, சிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல்.

பந்து வீச்சாளர்கள் : ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பத்திரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரகமான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, சர்துல் தாக்கூர் மற்றும் அவினாஷ் ராவ் ஆரவலி.

இதையும் படிங்க : IPL Auction 2024: கவனம் ஈர்த்த தமிழக வீரர் ஷாருக்கான்! சர்வதேச வீரர்களுக்கே சவாலளித்து அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.