லக்னோ : உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்கும் நிகழ்வு லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 5 முறை எம்பி.,யான யோகி ஆதித்யநாத் முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது அவருக்கு மட்டுமின்றி பாஜக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக 255 தொகுதிகளில் வென்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக முடிசூடவுள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் என 85 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதன் மூலம் 37 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப்போட்டுள்ளார் யோகி. இவர் இம்முறை கோரக்பூர் சர்தார் சட்டப்பேரவை தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : விஸ்வரூபம் எடுப்பாரா அகிலேஷ்.. ராஜினாமா பின்னணி என்ன?