டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் மல்யுத்த வீரரான கிரேட் காளி என்று அழைக்கப்படும் தலிப் சிங் ராணா இன்று(பிப்.10) பாஜகவில் இணைந்தார். பஞ்சாப் மாநில சட்டப் பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், காளியின் முடிவு மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து காளி கூறுகையில்,"பணம், புகழ் வேண்டும் என்றால் அமெரிக்காவிலேயே இருந்திருப்பேன்.
ஆனால் பிரதமர் மோடியின் சேவையை பார்த்து நாட்டிற்காக உழைக்க முடிவு செய்தேன். அதன்படி பாஜகவில் இணைந்துள்ளேன்" என்றார். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "கிரேட் காளியை எனக்கு ஓராண்டாக தெரியும். நேர்மையும் நாட்டின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர். அவரது உடலை போலவே, எண்ணங்களும் வலிமையானது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜகவில், அண்மைகாலமாக திரைப்படத்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஊக்கத்துடன் இணைகிறார்கள். இது பாஜாகவின் முன்னேற்றதிற்கு வழிவகுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: "வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்" - பிரதமர் மோடி