ETV Bharat / bharat

உலக தண்ணீர் தினத்தின் கதை தெரியுமா?

author img

By

Published : Mar 22, 2023, 7:08 PM IST

உலகெங்கும் மார்ச் 22ஆம் தேதியான இன்று தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தின் உறுதிமொழி பற்றி அறிந்துகொள்வோம்.

World Water Day 2023
World Water Day 2023

ஹைதராபாத்: 'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவன் கூறியது போல் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வின் முக்கிய காரணியாக அமைகிறது, தண்ணீர். மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீரை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், இன்று உலகெங்கும் தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. தண்ணீர் நம்மை காப்பது போல், நாம் தண்ணீரை வீணடித்தல் மற்றும் மாசுபடுத்தாமல் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு தனிநபர், குடும்பங்கள், சமூகத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தண்ணீரை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் குடிதண்ணீர் முக்கியத்துவத்தையும் அன்றாட தட்டுப்பாட்டையும் இந்த விழிப்புணர்வு முன்வைக்கிறது. அன்றாட வாழ்வில் தண்ணீர் பயன்படுத்தாதோர் என யாரும் இல்லை. ஆய்வின் படி 2 பில்லியன் மக்கள்தொகையில் 4 பங்கில் ஒருவர் என சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் தேனாய் இனித்த தண்ணீர் இன்று பல கலப்படங்களாலும் வேதியியல் மாற்றங்களாலும் மாசு படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிதண்ணீருக்கான தட்டுப்பாடும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத்தடுக்கும் நோக்கத்திலேயே உலகெங்கும் இன்று ''தண்ணீர் மற்றும் அதன் சுகாதார நெருக்கடி மாற்றம்'' என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடு பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு முதன்முதலில் 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி, உலக தண்ணீர் தினமாக உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் 1993ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 22ஆம் தேதியாக அனுசரிக்கப்படுகிறது. அன்றிலிருந்தே உலகெங்கும் தண்ணீர் தினம் மார்ச் 22-லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாட்டாலும் சுகாதாரமின்மையினாலும் 1.4 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும்; 74 மில்லியன் மக்கள் மாசு நிறைந்த தண்ணீரால் ஐக்கிய நாடுகளில் அலுவலகங்கள், விவசாய நிலங்கள், சுகாதார அமைப்பு, பள்ளிகள், தொழிற்சாலைகளில் முறையான தண்ணீர் உபயோக பழக்கங்கள் இல்லாததால் 2050ஆம் ஆண்டில் தண்ணீர் குறித்து இந்த குறைபாடுகள் தற்போதிலிருந்து 55% வரை உயரக்கூடும் என அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.

அதனால், தற்போது இந்நிலையை மாற்ற, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இதுகுறித்து ஐக்கிய நாடான நியூயார்க்கில் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கருத்தரங்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பொது இடங்களில் முறையான தண்ணீர் பழக்கங்கள், சுகாதாரம் நிறைந்த குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"நம்மை காக்கும் தண்ணீரை காப்போம்" - முதலமைச்சரின் உலக தண்ணீர் நாள் கருத்து!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.