ஜெனீவா : இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து பாதுகாப்பானது இல்லை என்றும் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்டோருக்கு அந்த இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும் அதனால் தீவிர பிரச்சினைகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
Guaifenesin syrup TG syrup என்ற மருந்தில் டை எத்திலின் மற்றும் எத்திலின் கிளைகால் ஆகிய ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதிக நச்சுத் தன்மை கொண்டு ரசாயனம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து விடுத்து உள்ளது.
மார்ஷெல் தீவுகள் மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குட்டி நாடான மைக்ரோனிசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளை பரிசோதனை செய்து பார்த்த போது இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மருந்தை பஞ்சாப்பை சேர்ந்த QP Pharmachem Ltd என்ற நிறவனம் தயாரித்து உள்ளதாகவும், அரியானாவை சேர்ந்த Trillium Pharma என்ற நிறுவனம் மேற்கு நாடுகளுக்கு சந்தைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை மற்றும் இறப்பை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரான சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) தெரிவித்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு மருந்து நிறுவனம் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. Guaifenesin syrup TG syrup என்ற இருமல் மருந்து மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிலும் சந்தைப்படுத்த உரிமை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
முறைசாரா சந்தைகள் மூலம் பிற நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த வகையிலான நச்சுத் தன்மை கலந்த அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இருமல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் இந்த தரமற்ற தயாரிப்புகளை கண்டறிந்தால் உடனடியாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புரோபிலீன் கிளைகோல், சர்பிடால், கிளிசரின், கிளிசரால் உள்ளிட்ட மருந்துவ துணை பொருட்களைக் கொண்ட இருமல் மருந்துகளை தயாரிக்கும் முன்பு எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் போன்ற நச்சுகள் உள்ளதா என சோதிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சுகாதார வல்லுநர்கள் தயாரிப்பு முறையில் ஏற்பட்ட நச்சுக் வினைவால் உருவான மருந்துகளின் பயன்பாடு குறித்து தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் அல்லது தேசிய மருந்தக கண்காணிப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க : நிலவில் தரையிறங்கும் தனியார் விண்வெளி நிறுவனத்தின் முயற்சி தோல்வி! நூலிழையில் வரலாற்று சாதனை தகர்ப்பு!