ETV Bharat / bharat

வாஷிங்டனில் களைகட்டிய உலக கலாச்சார விழா.. 180 நாடுகளை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பங்கேற்பு! - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

World cultural festival 2023: கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரையில் நடைபெற்ற உலக கலாச்சார விழா, உலகின் அனைத்து கலைஞர்களை ஒன்றிணைக்கும் வழியாக அமைந்ததாக பங்கேற்ற பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக கலாச்சார விழா 2023
உலக கலாச்சார விழா 2023
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:50 PM IST

வாஷிங்டன்: வாஷிங்டனில் கோலாகலமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த 29ஆம் தேதி 4வது உலக கலாச்சார விழா தொடங்கியதாக தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் (the art of living) அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், ஒற்றுமையை நிலைநாட்டவும், கலையின் நுட்பத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் கொண்டாட்டமான உலக கலாச்சார விழா, உலக ஆன்மீக தலைவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில், தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் அமைப்பினர் நடத்தினர்.

  • Gurudev @SriSri led a yoga and meditation session for thousands of participants at the National Mall in Washington DC, on the second day of the World Culture Festival. pic.twitter.com/WkWJ01vy0i

    — The Art of Living (@ArtofLiving) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அக்டோபர் 1 வரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 180 நாடுகள் சங்கமித்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து முன்னோடிகளும், தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.

மேலும் இந்த விழாவில் யாரும் எதிர்பாராத வகையில், 10 லட்சம் மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் 1000 சீனப்பாடகர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள், ஒரு நாளில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. இது மட்டுமின்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கர்பா நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றனர்.

இதைத்தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட உக்ரேனிய கலைஞர்கள், ஆப்கானி சூஃபி கலைஞர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கித்தார் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் நிறைந்து நூற்றுக்கணக்கான நாடுகளின் கொடிகள் பறந்தபடி நடனம், இசை, உணவு என நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட உக்ரேனிய கலைஞர்களின் பாரம்பரிய நடனக்கலை நிகழ்ச்சி, நாட்டின் தொடக்கத்திலிருந்து தற்போது நடைபெற்று வரும் போரால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உக்ரேனிய மக்களின் நிலையை வெளிப்படுத்தியது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அனைவரும் ஒரு நிமிடத்திற்கு மௌனப் பிரார்த்தனை மேற்கொள்ளும் அளவிற்கு நடந்தது. பின்னர் அனைத்து நாட்டின் தலைவர்களின் கருத்துக்கள், மற்றும் சிறப்புப் பேச்சுக்கள் மக்களை அளப்பறிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது ஒருபுறம் இருக்க இன்று 2வது நாளாகத் தொடர்ந்த இந்த நிகழ்ச்சியில், உலக ஆன்மீக தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில், தனித்துவம் நிறைந்த யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற லிங்கன் நினைவிடத்தில் நடைபெற்றது. இது வரலாற்று ரீதியாக உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இந்தியா முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் மனைவி, அகி அபே, அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்க செனேட்டர் ரிக் ஸ்காட், நான்சி பெலோசி எனப் பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "உலகில் மலைகள் முதல் சமவெளிகள் வரை அனைத்து பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்குபெற்று, கலாச்சாரத்தையும், உலக மக்களையும் ஒன்றிணைக்கவும் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்குப் பெருமை. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலகளாவிய குடும்பத்திற்கு ஒரு நுண்ணிய உருவத்தை வழிவகை செய்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ராம்நாத் கோவிந்த் தனது பிறந்தநாளை அந்நிகழ்ச்சியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் எம் தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுச் சிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா செயல்படுத்த வேண்டும்: நடிகை ராதிகா வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.