ETV Bharat / bharat

நடிகை திஷா பதானியின் லெஹங்காவுக்காக ஒருமாத காலம் வேலை செய்தேன் - சொல்லும் முக்கியப்புள்ளி

author img

By

Published : Aug 2, 2023, 11:09 PM IST

Updated : Aug 4, 2023, 6:11 PM IST

இந்திய ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா (FDCI) ஏற்பாடு செய்திருந்த இந்திய ஆடை வாரத்தின் ஏழாவது நாளான ஆகஸ்ட் 1 அன்று பாலிவுட் ஏ-லிஸ்டர்களான சாரா அலி கான், ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பதானி ஆகியோர் தங்களின் அசத்தலான ஆடைகளால் மேடையை அலங்கரித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினர்.

நடிகை திஷா பதானியின் லெஹங்காவுக்காக ஒருமாத காலம் தான் வேலை செய்ததாக அதன் ஆடை வடிவமைப்பாளர் டோலி ஜே கூறியுள்ளார்.

நடிகை திஷா பதானி

டெல்லி: எஃப்டிஎஃப்சி ஹூண்டாய் இந்தியா கூச்சர் வாரத்தின் ஏழாவது நாளில், ஆடை வடிவமைப்பாளர் டோலி ஜே வடிவமைத்த பளபளப்பான வெள்ளி நிற லெஹங்காவை அணிந்து, அனைவரையும் ஈர்க்கும் வகையில் கேட்வாக்கில் மேடையை வலம் வந்தார், நடிகை திஷா பதானி.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி. இவர் 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் இவர், தற்போது சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த ஆடையை வடிவமைக்க வடிவமைப்பாளர் டோலி மற்றும் அவரது குழுவினருக்கு ஒரு மாதம் தேவைப்பட்டதாக கூறப்படுகிரது. டோலி ஜே, தனது சமீபத்திய ஆடை கலெக்‌ஷன்ஸ்-க்கு வானுலகத்தின் கிரேக்க தெய்வத்தின் பெயரான 'செலீன்' எனப் பெயரிட்டுள்ளார். அவரது இந்த கலெக்‌ஷன்களுக்கு மர்மம், அழகு, அதிசயம் ஆகிய காலத்தால் அழியாத சின்னமான நிலவு முன்னுதாரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை செய்தோம், வித்தியாசமான நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். அதற்கான சரியான வெள்ளி நிறம் கிடைக்கும்வரை அதை தேடினோம். நாங்கள் எங்கள் மனதில் வைத்திருந்த அந்த சரியான வெள்ளி நிறத்தை யாராலும் தர முடியவில்லை. நாங்கள் இதற்காக முயற்சித்துக்கொண்டே இருந்தோம். இறுதியில் சரியாக வெள்ளி நிறமும், சரியான வடிவமும் கிடைத்தது.

இதற்கான முன்னுதாரணமாக பிரபஞ்சத்தின் மிக அழகான வானுலகம் அமைந்தது. நிலவு, அதன் கதிர்கள், கருமையான இரவில் அது பிரகாசிக்கும் விதம், மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை இதற்கு முன்னுதாரணமாக அமைந்தது. பின்னர் அங்கிருந்து எங்கள் கலெக்‌ஷன்ஸை எடுக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு வசீகர அனுபவத்தை தர நினைத்தோம். அதனால், நாங்கள் வடிவமைத்த அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் இருப்பதை உறுதி செய்தோம். எனவே, எனக்கான முன்னுதாரணம் நிலவின் ஒளி என்றே கூறலாம்'' எனக் கூறினார்.

நிகழ்ச்சிக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆடை வடிவமைப்பாளரின் இந்த ஆடையை அணிகையில் கடவுளை போல் உணர்வதாக நடிகை திஷா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "இன்று காலை நான் அடையாளம் தெரியாத வகையில் என் ஷார்ட்ஸ் மற்றும் லூஸ் டி-ஷர்ட்டில் இருந்தேன்.

நான் பெண்ணாகவும் அதே நேரத்தில் நான் நானாகவும் இருக்க விரும்புகிறேன். தற்போது இந்த உடையை அணிகையில் நான் பெண்மையை உணர்கிறேன். நான் ஒரு கடவுளை போல உணர்கிறேன். அதற்காக அவருக்கும் அவளுடைய அழகான வடிவமைப்பிற்கும் நன்றி. எனக்கு பாடிகான் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் மிகவும் வசதியான எதையும் நான் விரும்புகிறேன்” என அவர் கூறினார்.

அவரது இந்த கலெக்‌ஷன்ஸில் முத்து வெள்ளை அழகு பொருட்கள், உலோக திசுக்கள், ஐவரி டல்லே மற்றும் ஒளிவட்டமாக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான தலைக்கவசங்களுடன் கூடிய மாறுபட்ட வெள்ளி அழகு பொருட்கள் கொண்ட கவுன்கள் மற்றும் லெஹெங்காக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஃபேஷன் காலாவின் 16வது பதிப்பு இன்றுடன் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொடி பறக்குற காலம்... உலக சாதனைப் படைத்த மாமன்னன்!

Last Updated : Aug 4, 2023, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.