கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்டபொம்மசந்திரா என்ற பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளின் படிப்பு செலவுக்காக, ராமகிருஷ்ண ரெட்டி என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர் கடனை திருப்பி செலுத்த தாமதமானதாக தெரிகிறது. இதனால் முழு தொகையும் உடனடியாக திருப்பி தரும்படி ராமகிருஷ்ண ரெட்டி வற்புறுத்தியுள்ளார். தனது நிலத்தை விற்று பணம் தருவதாக அந்த பெண்மணி கூறியுள்ளார்.
இருந்தபோதும், அத்துமீறி தனது ஆட்களுடன் அவரது வீட்டிற்குள் நுழைந்த ராமகிருஷ்ண ரெட்டி, அந்த பெண்மணியையும் அவரது சகோதரியையும் பாலியல் தொந்தரவுக்குள்ளாகியதோடு, தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சர்ஜாபூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக போலீசார் புகார் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்களை ராமகிருஷ்ண ரெட்டியுடன் சமரசமாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே இரு பெண்களும் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ண ரெட்டி மற்றும் சுனில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திராம்மா என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: உதய்பூர் கொலை: தப்பிச் செல்லும் கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்!