டெல்லி: தனது காதலனை வெட்டி சூட்கேஸில் வைத்துச்சென்ற காதலியை நேற்று(ஆக.7) காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரீத்தி சர்மா எனும் இவர், ஃபெரோஸ் எனும் தனது காதலன் தன்னைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி சூட்கேஸில் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
மேலும், இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் எனும் இவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஃபெரோஸ் இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
காதலனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச்செல்லும் போது எதேச்சையாக காவல்துறையினர் சோதனை செய்கையில் பிரீத்தி சர்மா சிக்கியுள்ளார். இதனையடுத்து ஃபெரோஸின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஒரு பக்கம் பாஜக ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை ’லவ் ஜிஹாத்’ எனக்கூறி ஓர் இந்துப்பெண்ணை இஸ்லாமிய இளைஞர் திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி விற்றதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் முன்னே ஆபாச செயல் செய்தவரின் ஆண் உறுப்பை தீயில் எரித்த கிராம மக்கள்!