ETV Bharat / bharat

மதத்தை மாற்றும்படி கட்டாயம் - மனைவி, குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற கணவன்

லக்னோவில் மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தி, மனைவி, குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற கணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 19, 2021, 9:24 PM IST

மனைவி, குழந்தகளை கொலை முயன்ற கணவன்
மனைவி, குழந்தகளை கொலை முயன்ற கணவன்

கடந்த பிப்ரவரி 2009யில், ராஜிவ் என்பவர் இந்து பெண்ணைக் காதலித்து ஒரு ஆர்யா சமாஜ் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்குப் பிறகு பெண் மத ரீதியாக ஏமாற்றப்பட்டதாகவும், தனது கணவரின் உண்மையான பெயர் 'முகமது அப்சல் சித்திகி' என்பதும் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் பலமுறை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு 8 மணியளவில், முகமது அப்சல் சித்திகி அப்பெண்ணையும், அவர்களது இரண்டு குழந்தைகளையும் வீட்டில் பூட்டி வைத்து, தீ வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். உடனே, அப்பெண் காவல் துறையினருக்குப் போன் செய்துள்ளார்.

தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அப்பெண்ணையும் அவரது குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர்.

விசாரணையில் அந்த இந்து பெண்ணை தனது மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும், தங்கள் குழந்தைகளை விருத்தசேதனம் செய்ய விரும்புவதாகவும் முகமது கூறியுள்ளார்.

இதனை மறுத்ததால் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து, முகமது அப்சல் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'நூறு ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.