டெல்லியை அடுத்த ஷக்கூர்பூர் பகுதியில் இரண்டு குழந்தைகளைத் தூக்கிலிட்டு, தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக ஒரு நபர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், தற்கொலை செய்துகொண்ட பெண் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர், மேற்கு வங்கத்தில் நடைபெறும் முண்தான் விழாவிற்காக தன்னை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால், இன்று காலையிலேயே கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், கணவர் பணிக்குத் திரும்பியவுடன் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பணியிலிருந்து திரும்பிய கணவர் நீண்ட நேரம் கதவினைத் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்து சாளரம் (ஜன்னல்) வழியாக வீட்டைப் பார்த்தபோது, மனைவியும், குழந்தைகளும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டை உடைத்து உள்ளே சென்று உடல்களை மீட்டுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.