கோட்டயம் (கேரளா) : கேரள மாநிலம் மணர்காடு பகுதியில், தங்களது இணைகளை பரிமாறிக் கொண்ட விவகாரம் தொடர்பாக, புகார் அளித்த 26 வயது இளம்பெண், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். உயிரிழந்த பெண், கோட்டயம் மாவட்டம் மணற்காடு மலம் காஞ்சிரத்தும்மூடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம், 19ஆம் தேதி காலை நிகழ்ந்து உள்ளது.
மனைவியை மாற்றிக் கொண்ட விவகாரம் வெளியானதை அடுத்து அந்த பெண், தனது கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, அப்பெண்ணின் தந்தையும், சகோதரரும், வேலைக்கு சென்று விட்டனர். பெண்ணின் சடலத்தை, குழந்தைகள் தான் முதலில் பார்த்து உள்ளனர். பின் அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள், அப்பகுதி வார்ட் உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அப்பெண்ணின் சடலத்தை மீட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2022ஆம் ஆண்டில், மனைவி பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கணவரை, தன் மகள் பிரிந்து என் வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். என் மகளை, அவளது கணவன் தான் கொலை செய்து உள்ளதாக, பெண்ணின் தந்தை, போலிசிடம், வாக்குமூலம் அளித்து உள்ளார். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இந்த கொடூர கொலையை செய்தது யார் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அப்பெண்ணின் கணவர், அவரை வேறு ஒருவருடன் செல்ல வற்புறுத்தி உள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். கணவர் தன்னை பலருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம் பார்ட்னர்களை மாற்றிக் கொள்ளும் பெரும் மோசடி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
சமூக ஊடகங்களில் 'ஜோடி ஷேரிங்' மற்றும் 'கப்பிள் மீட் அப் கேரளா' என்ற குழுக்களை உருவாக்கி இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, புகார் அளித்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 7 பேரை, போலிசார் கைது செய்தனர்.
இந்த குழுவினர், ரகசிய அரட்டைகளின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதும், மனைவிகளை மாற்றிக் கொள்பவர்களுக்கு பணம் கொடுப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த குழுக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர், ஈடிவி பாரத் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது, “ தனது சகோதரி, எட்டு ஆண்களால் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இணங்க மறுத்ததால், அவரது கணவர் குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக” அவர் தெரிவித்து உள்ளார்.
தான் இரண்டு வருடங்களுக்கும் மேலாக, இந்த சித்திரவதையை அனுபவித்ததாகவும், அவர்களது குழுவில் இணைந்து செயல்பட மறுத்ததால், அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக, புகாரில், அப்பெண் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை... கேரள அரசு அதிரடி உத்தரவு