ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா (Samba)மாவட்டத்தில், பெண்மணி ஒருவர் தனது குழந்தையை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், தனது கால்களில் படுத்திருந்த குழந்தை அழுது கொண்டிருக்க, அதனை ஈவிரக்கமின்றி அந்த பெண்மணி தாக்குகிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்திருந்தனர். மேலும், குழந்தையை காட்டுமிராண்டித் தனமாக தாக்கும் இந்த பெண்மணியை கைது செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த வைரல் வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வீடியோவில் இருந்த பெண்மணி பிரீத்தி ஷர்மா என்பதும், அவர் அப்பர் கமிலா புர்மண்டல் (Upper Kamila Purmandal)பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை தாக்கிய தாயாரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பெண்மணியின் மனநிலை குறித்தும், அவர் எதற்காக குழந்தையை தாக்கினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜார்கண்ட் கேபிள் கார் விபத்து மீட்புப் பணி முடிந்தது