ETV Bharat / bharat

மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு 'உரிய பதிலளிப்போம்' என பசவராஜ் பொம்மை பேச்சு!

author img

By

Published : Jun 8, 2022, 10:46 PM IST

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு எதிர்க்கும் நிலையில், இதற்கு கர்நாடகா அரசு உரிய பதிலளிக்கும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை பேச்சு
பசவராஜ் பொம்மை பேச்சு

மைசூர் (கர்நாடகா): டெல்லியில் ஜுன் 17ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜுன் 7) தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது எனக் கூறி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று (ஜுன் 8) கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு கர்நாடகா அரசு உரிய பதிலளிக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இந்திய அரசுக்கு வழிகாட்டும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டது. திட்டங்களுக்கு அனுமதியளிக்கவும், உத்தரவுகள் பிறப்பிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை கோரி- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.