ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் வலுக்கும் தனி மாநில கோரிக்கை

முதலாவதாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் ஜான் பார்லா ஞாயிற்றுக்கிழமை வட வங்காள மாவட்டங்களை உள்ளடக்கிய தனி மாநிலத்தை கோரினார். திங்களன்று, பாஜக எம்பிக்களான சௌமித்ரா கான், ராஜு பிஸ்ட்டா ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் சௌமித்ரா கான் ஜுங்கல்மஹால் என்ற தனி மாநில கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

author img

By

Published : Jun 22, 2021, 9:29 AM IST

Updated : Jun 23, 2021, 6:59 AM IST

Will resist Bengal's division at all cost: all parties

கொல்கத்தா: பாங்குரா, புருலியா, மேற்கு மிட்னாபூர், ஜார்கிராம், பர்த்வான், பிர்பம், ஹூக்ளி மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தனி ஜுங்கல்மஹால் மாநிலத்தை சௌமித்ரா கான் கோரியபோது, ராஜு பிஸ்டாவின் கோரிக்கை டார்ஜிலிங், கலிம்பொங் மலை மாவட்டங்களை உள்ளடக்கிய தனி கோர்கலாந்து மாநிலமாக இருக்கிறது.

பாஜக அவர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், மற்ற அரசியல் கட்சிகள் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கான பாஜகவின் சூழ்ச்சி என்று குற்றஞ்சாட்டுகின்றன. திருணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒரே மாதிரியான குற்றச்சாட்டையே முன்வைக்கின்றனர்.

துக்தே துக்தே கேங்

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், "ஜுங்கல்மஹால் மாவட்டங்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட பின்னர், பாஜக மக்களவை உறுப்பினர் தற்போது அவரது மனநிலையிலிருந்து தடம் மாறிவிட்டார்" என்றார்.

"இந்த மாவட்டங்களின் மக்கள் பாஜகவை நிராகரித்தனர். எனவே விரக்தியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இத்தகைய பிளவை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். பாஜக அதன் எதிரிகளை 'துக்தே துக்தே கேங்' என்று வர்ணிக்கிறது. இப்போது அவர்கள் வங்காளத்தைச் துண்டுகளாகப் பிரிக்க முயற்சிக்கின்றனர்" என்றும் கோஷ் குறிப்பிடுகிறார்.

மாநிலத்தைப் பிளவுபடுத்தும் முயற்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் டாக்டர் சுஜன் சக்ரபோர்த்தி, பாஜகவின் இத்தகைய பிளவுபடுத்தும் தந்திரங்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். "பிளவுபடுத்தும் அரசியலை மேற்கு வங்கம் ஆதரிக்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான எந்தவொரு சதியையும் நிறுத்திவிடும்" என்று அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஆளும் திருணமூல் காங்கிரஸையும் அவர் விமர்சித்தார்.

"திருணமூல் காங்கிரசுக்கும் இதில் சமமான பொறுப்பு உள்ளது. நாங்கள் பலமுறை எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், அவர்கள் கோர்கலாந்து பிராந்திய நிர்வாக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றினர். உண்மையில், திருணமூல் மறைமுகமாக மாநிலத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியை ஆதரித்தது" என்று சக்ரபோர்த்தி குற்றஞ்சாட்டினார்.

புறக்கணிக்கப்படும் ஜுங்கல்மஹால் மக்கள்

காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரதீப் பட்டாச்சார்யா, மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்தும் அரசியலை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். "இத்தகைய கோரிக்கைகள் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியின் எதிரொலியாக பாஜக விரக்தியின் பிரதிபலிப்பாகும். இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் சயந்தன் பாசு, "கானின் கூற்றுகள் அவரது தனிப்பட்டது; கட்சியின் கருத்து அல்ல என்று கூறினார். "இருப்பினும், ஜுங்கல்மஹால் மாவட்ட மக்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டனர் என்ற கானின் கூற்றை நான் ஆதரிக்கிறேன். இந்த மாவட்ட மக்களுக்கு தனி மேம்பாட்டு வாரியம் இருக்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு ஒரு தனித் தொகுப்பும் இருக்க வேண்டும்" என்று பாசு கூறினார்.

Last Updated : Jun 23, 2021, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.