ETV Bharat / bharat

கேரள அரசுக்கு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த பிஎப்ஐ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - பிஎப்ஐ

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய கடையடைப்பால் அம்மாநில அரசுக்கு ஏற்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்தும்படி பிஎப்ஐ அமைப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Will
Will
author img

By

Published : Sep 29, 2022, 8:20 PM IST

கொச்சி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதன் எதிரொலியாக, கடந்த 23ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதன்பின் நேற்று, அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், கேரளாவில் நடந்த கடையடைப்பின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி, கேரள போக்குவரத்துக் கழகம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கடந்த 23ஆம் தேதி நடந்த கடையடைப்பு போராட்டத்தின்போது, 58 பேருந்துகளின் இருக்கைகள் சேதமடைந்தன. ஒரு பயணி மற்றும் 10 ஊழியர்கள் காயமடைந்தனர். கேரள போக்குவரத்துக் கழகம், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த போராட்டத்தால் 5 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கடையடைப்புப் போராட்டம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது. அதனால், இதற்கான இழப்பீட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கேரள போக்குவரத்துக் கழகம் கோரிய இழப்பீட்டை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு உத்தரவிட்டது.

அவர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்கும்வரை யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், கடையடைப்பின்போது நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில முன்னாள் பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரை சேர்க்கவும் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.