ETV Bharat / bharat

பேரறிவாளனை நீதிமன்றமே ஏன் விடுவிக்கக் கூடாது? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி - ஆளுநருக்கு கண்டனம்

பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில், யார் விடுவிப்பது என்ற சிக்கலில் அவர் ஏன் சிக்க வேண்டும்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Perarivalan
Perarivalan
author img

By

Published : Apr 27, 2022, 5:28 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் கடந்த 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக, பேரறிவாளனை சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு கைது செய்தது. இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பேரறிவாளன் சிறையில் உள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அவ்வப்போது பரோலும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு இன்று (ஏப்.27), நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும், ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருவதாக பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோரின் அதிகாரம் குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, பேரறிவாளனை நீதிமன்றமே ஏன் விடுவிக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் ஆளுநரின் பதில் எப்போதும் முரணாகவே இருப்பதால், பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுவதாக தெரிவித்தனர்.

யார் விடுதலை செய்வது என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதோடு, மாநில அரசு முன்வைக்கும் ஒரு பிரச்சினையில், ஆளுநர் சொந்த விருப்பு வெறுப்புகளோடு செயல்பட முடியாது என்றும், பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர்.

பேரறிவாளனை விடுவிப்பதில் ஆளுநருக்கு விருப்பம் இல்லை என்றால், அதில் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துவிடுவாரா? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளில் 15,000 குழந்தை திருமணங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.