மாநிலங்களவை கூட்டத்தொடரில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா- சீனா எல்லை பிரச்னையில், லடாக்கின் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தென் பகுதியிலிருந்து படைகளை வெளியேற்றுவதற்கான உடன்பாடு இரு நாட்டு உயர் அலுவலர்கள் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலைமையை மீட்டெடுக்காவிட்டால், நாட்டில் அமைதி இருக்காது. எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது, ஜவான்களின் தியாகத்தை அவமதிக்கும் செயலாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த சண்டையிலிருந்து, எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லடாக்கில் என்ன நடக்கிறது?