இந்தியா சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சினை குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் ஆயிரக்கணக்கான கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்துள்ளது. இதை அவர்கள் எப்போது திரும்ப மீட்டெடுக்கப் போகிறார்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் மோதிக்கொண்ட நிலையில், இரு ராணுவத் தரப்பும் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் எந்தவித தீர்வு எட்டப்படாத நிலையில் இதைச் சுட்டிக்காட்டி ராகுல் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!