ETV Bharat / bharat

Kochi Water Metro: நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ(Water Metro) திட்டத்தை பிரதமர் மோடி நாளை(ஏப்.25) திறந்து வைக்க உள்ளார். போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் இந்த திட்டம் ஏன் கேரளாவில் தொடங்கப்படுகிறது. இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தில் உள்ள அம்சங்கள் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Water Metro
Water Metro
author img

By

Published : Apr 24, 2023, 2:11 PM IST

கொச்சி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளா செல்கிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் இந்த திட்டம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள மாநில அரசு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த KfW என்ற நிறுவனத்தின் கூட்டு நிதியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கேரளாவின் கனவுத் திட்டம் என இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொச்சி மாவட்டத்தில் இருந்து செயல்படுத்தப்படும் இந்த வாட்டர் மெட்ரோ 10 தீவுகளை ஒன்றிணைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு முதற்கட்டமாக கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து மின் மற்றும் எரிபொருளில் இயங்கக் கூடிய 8 கலப்பின கப்பல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஒட்டுமொத்தமாக கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் மூலம் 38 முனையங்களில் 78 கப்பல்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாட்டர் மெட்ரோ மாநிலத்தின் சுற்றுலாத்துறையும், பொது போக்குவரத்தையும் ஊக்குவிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் பெருக இந்த திட்டம் வழிவகை செய்யும் என கூறப்பட்டு உள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக, உயர் நீதிமன்றம் - வைபின் டெர்மினல் மற்றும் வைட்டிலா- காக்கநாடு டெர்மினல் வரையில் கப்பல் போக்குவரத்து சேவைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உயர் நீதிமன்றம் - வைபின் டெர்மினல் இடையிலான போக்குவரத்து 20 நிமிடமும், வைட்டிலா- காக்கநாடு டெர்மினல் இடையேயான போக்குவரத்து 25 நிமிடங்களாகவும் குறையும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பின்னர் படிப்படியாக இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் முழுமையாக நீட்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வாட்டர் மெட்ரோவில் பயணிக்க பயணி ஒருவருக்கு குறைந்தபட்ச டிக்கெட்டாக 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை குறைப்பால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அது சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் பயணிகளின் வசதிக்கு ஏற்ப வாரம் மற்றும் மாதந்திற பயணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், கேரள மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயன்படுத்தப்படும் மெட்ரோ அட்டைகளை கொண்டே வாட்டர் மெட்ரோவிலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொச்சி ஒன் ஆப் என்ற செயலி மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

  • A significant enhancement to Kochi's infrastructure! The Kochi Water Metro would be dedicated to the nation. It will ensure seamless connectivity for Kochi. pic.twitter.com/SAvvEz8SFt

    — Narendra Modi (@narendramodi) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே கொச்சி வாட்டர் மெட்ரோ குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில் "கொச்சியின் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமான கொச்சி வாட்டர் மெட்ரோ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இது கொச்சிக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்யும்" என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : பாலியல் புகார் : மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் - விசாரணையில் வெளிப்படைத்தன்மை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.