கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில், வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்(Duare Ration Scheme) தொடங்கப்பட்டது. இதனை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம் மூலம் 10 கோடி மக்கள் பயனடைவர். இந்தத் திட்டத்திற்காக 21,000 விநியோகஸ்தர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதிவுதவி வழங்கப்படும். எனவே மக்கள் இனி வீட்டிலிருந்தபடியே ரேஷன் பொருள்களை பெறலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Pongal 2022 : தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு