மேஷம்: இந்த வாரம் புதிய நம்பிக்கையுடன் தொடங்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நினைத்து மிகவும் கவலைகள் ஏற்படலாம். தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் பதற்றம் உங்களுடைய பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் ஆனால் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். அதை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். காதலிப்பவர்கள் உறவுகளின் அழகை ரசிப்பார்கள். உங்களுக்குள் இருக்கும் தூரம் குறைந்து ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். நற்செயல்கள் செய்வதன் மூலம் நல்ல இடத்தைப் பெறுவீர்கள். தொழில் புரிபவர்கள் மிகுந்த மன உளைச்சலில் வேலை செய்ய வேண்டி இருக்கும். எதையாவது சிறப்பாகச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதுடன், அவர்கள் கவனமும் அதிகரிக்கும். பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால், வார நடுப்பகுதி சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்: இந்த வார தொடக்கத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். அதிலிருந்து வெளியே வர வாரத்தின் நடுப்பகுதி வரை நேரம் எடுக்கும். செலவுகளில் கவனமாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும். திருமணமானவர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை சரியாக பழக மாட்டார்கள். இது மேலும் சில பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும். இனி வரும் காலம் சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கும் இது நல்ல நேரம். நண்பருக்கு உதவ முடிந்தாலும், உங்கள் உறவை முன்னெடுத்துச் செல்லவும், உங்கள் அன்பை காதலிப்பவரிடம் வெளிப்படுத்தவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். காரணமில்லாமல் உங்கள் பணத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் அது திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகாது. வேலை செய்பபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் தொழில் புரிபவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: இந்த வாரம் முன்னேறுவதற்கு ஊக்குவிக்கும் வாரமாகும். ஆனால் நிறைய சவால்களை நீங்கள் சந்திக்க ஏற்படலாம். அவை உங்கள் வளர்ச்சிப் பாதையைத் தடுக்கும். அதை நீங்கள் பொறுமையாக கையாளவும், மெதுவாக அதிலிருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்கவும். வருமானம் அதிகம் ஏற்படும், அது உங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும், ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வேலையில் சாதகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்திற்கு நேரம் சிறப்பாக இருக்கிறது. முதலீடு செய்தால் நன்மை ஏற்படும். கடந்த காலங்களில் செய்த முதலீட்டால் ஆதாயம் அடைவீர்கள். அரசுத் துறையின் எந்தத் திட்டத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். நண்பர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை காதலிப்பவரின் உடல்நிலை மோசமடையக்கூடும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியாகவும், இல்லற வாழ்வில் சந்தோஷமாகவும் இருப்பார்கள். வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு உகந்ததாக இருக்கும்.
கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படும், வேலையை மாற்றுவது பற்றி யோசிப்பீர்கள் அல்லது இடமாற்றம் கிடைக்கலாம். வேலையில் பளு அதிகரிக்கும். குடும்பத்திற்காக உங்களால் குறைந்தளவிலே நேரத்தை ஒதுக்க முடியும். குடும்பத்தில் டென்ஷன் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் சூழ்நிலை ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள். தொழில் புரிபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். அதிலிருந்து உங்களுக்கு நன்மை ஏற்படும். வேலை செய்பவர்கள் கடின உழைப்பின் மூலம் சிறப்பாக செயல்படுவார்கள், சில பிரச்னைகள் மூலம் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படலாம். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மேம்படும். காதல் வாழ்க்கைக்கு நேரம் சுமாராக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, உங்கள் உறவில் முன்னேற வேண்டும். பயணங்களுக்கு சாதகமான நேரம் அமையும்.
சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளலாம். எதிர்காலத்தில் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில புதிய நபர்களைச் சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். வேலை செய்யுமிடத்தில் நிலைமை நன்றாக இருக்கும். தொழில் புரிபவர்கள் புதிதாகவும், வித்தியாசமாகவும் சிந்திக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் நீங்கள் தோல்விப் பாதையிலிருந்து விலகி புதியதைச் செய்வதன் மூலம் மட்டுமே உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியும். அதைப் பொறுத்து உங்களுக்கு நன்மை ஏற்படும். இந்த வாரம் உங்கள் வருமானம் சுமாராக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாகும். உங்களது உறவு வலுவாகத் தோன்றும். வார முற்பகுதியில் பயணங்கள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படும்.
கன்னி: வாரத்தின் தொடக்கம் பலவீனமாக இருப்பதால் பதட்டம் ஏற்படலாம், இதன் காரணமாக உங்கள் ஆரோக்கித்தில் பாதிப்பு ஏற்படலாம். இதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பும், நம்பிக்கையும் கண்டிப்பாக ஏற்படும். சில புதிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளும், வேலையில் வேகமும் உங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும். திருமணமானவர்கள் வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து பெருமளவு விடுபடுவதை உணரலாம். மேலும் வாழ்க்கைத் துணையுடன் குடும்பங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சிப்பதைக் காணலாம். காதலிப்பவர்களுக்காக பெரிய காரியம் ஒன்றைச் செய்ய திட்டமிடுவீர்கள். பயணங்களை வாரத்தின் மத்தியில் மேற்கொள்வது நல்லது. வெற்றிக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. எனவே நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி கடினமாக உழைக்கவும்.
துலாம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான லாபகரமாக இருக்கும். உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இருவரின் ஆரோக்கியமும் கவலைக்குரியதாக மாறும். மேலும் உங்களுக்கு செலவுகள் அதிகரித்தபோதும் வருமானம் நன்றாகவே கிடைக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகளாக மாறும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புண்டு. அதனை கவனமாக கையாளுங்கள். நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். வேலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல், சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சி செய்து திருமண ஏற்பாடுகளைத் தொடங்குவீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும். இனி காலம் சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான லாபகரமாக இருக்கப் போகிறது. செலவுகள் மிகவும் அதிகரிக்கும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இல்லையெனில் நிதி நிலைமை மோசமடையக் கூடும். சேமிப்பில் இருந்து ஒரு பகுதியும் செலவாகும், அதற்காக தைரியத்தை இழக்க வேண்டாம். வரும் காலத்தில் லாபம் அதிகம் கிடைக்கும், வேலை செய்பவர்களின் இயக்கம் தொடரும். பயணங்கள் உங்களை சோர்வடையச் செய்யலாம், அதன் மூலம் நோய் வாய்ப்படலாம், எனவே கவனமாக இருங்கள். வயிறு சம்பந்தமான உபாதைகளும் உண்டாகலாம். சுத்தமான தண்ணீரும், சிறந்த உணவும் அவசியம். வீட்டு உணவை மட்டுமே சாப்பிடுங்கள். தொழில் புரிபவர்களுக்கு சகஜமான நேரமிது. திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மன அழுத்தத்தை உணர்வார்கள், தேவையற்ற கவலைகள் உறவை பலவீனப்படுத்தும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். காதலிப்பவரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வார முற்பகுதியில் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கவனம் செலுத்துவார்கள்.
தனுசு: இந்த வாரம் உங்கள் எதிரிகளை விட, நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும். நீங்கள் கடைபிடிக்கும் உத்தி உங்களை வியாபாரத்தில் முன்னோக்கி அழைத்துச் செல்லும், அதன் மூலம் மகத்தான நன்மைகளைப் பெறுவீர்கள். அரசுத் துறையிலும் பெரிய ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் வேலையில் மிகவும் நிபுணத்துவம் பெறுவது, நல்ல முடிவுகளைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று தொந்தரவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பை நிறைவேற்றி, அவர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள், உங்கள் வாழ்க்கைத் துணையால் பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு சற்று பலவீனமாக இருக்கிறது. தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளியால் அதிக லாபம் கிடைக்கும். வாரத்தின் முதல் நாள் பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும்.
மகரம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வார முற்பகுதியில் பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த வாரம் திருமணம் ஆனவர்களுக்கு உகந்த வாரமாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்பாக பேசுவார். மாமியாருடன் உறவு வலுவாக இருக்கும். இந்த வாரத்தின் தொடக்கம் காதலிப்பவர்களுக்கு சிறந்ததாகும். காதலிப்பவர் இதயப்பூர்வமாக அவரது அன்பை உங்களுக்கு அளிப்பார், அதனால் உங்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும், நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதீத நம்பிக்கையால் எந்த தவறும் செய்யாதீர்கள், ஆனால் இந்த வாரம் சுமாரானதுதான். தந்தையின் உடல்நிலை மோசமடையலாம், அவரை கவனித்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.
கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வார முற்பகுதியில், சில விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வரக்கூடும், அவர்களை சந்திப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அதிர்ஷ்ட பலத்தால் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும், நிறுவனம் வளர்ச்சி அடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சூழ்நிலைகள் படிப்படியாக கட்டுக்குள் வந்து, வேலையில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல திட்டமிடலாம். காதலிப்பவர்களுக்கு காலம் சாதகமாக உள்ளது. எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், காதலிப்பவரிடம் அனைத்தையும் சொல்லுங்கள், இது ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு வேலையில் வெற்றியைத் தரும். மாணவர்களுக்கும் நேரம் சாதகமாக உள்ளது. உங்களின் கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதி பயணங்களுக்கு ஏற்ற காலமாகும்.
மீனம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான லாபகரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் சிறிது பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கலாம். வார நடுப்பகுதி நன்றாக இருக்கும். செலவுகள் குறைந்து வருமானம் அதிகமாக ஏற்படும். வாரத்தின் கடைசி நாட்களில், வங்கி இருப்பு அதிகமாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், இல்லற வாழ்க்கை வாழ்பவர்கள் சிறுசிறு சண்டை சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் அதையும் மீறி உங்கள் உறவு நன்றாகவே இருக்கும். நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் உறவில் வலுவாக நின்று காதலிப்பவரின் இதயத்தை வெல்ல முயற்சி செய்யுங்கள். அதற்காக நேர்மையாக முயற்சி செய்யுங்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படித்தால் முழு பலன் கிடைக்கும். வாரத்தின் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.