ETV Bharat / bharat

ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் குடித்தாக பிக் பாஸ் வெற்றியாளர் மீது புகார்.. எல்விஷ் விளக்கம் என்ன? - India all news in tamil

Big Boss OTT 2 winner: பிக் பாஸ் ஓடிடி 2 வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து விடியோ ஒன்றைத் தனது X பக்கத்தில் எல்விஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். இதில் தன் மீது பதியப்பட்ட வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

watch-elvish-yadav-denies-charges-against-him-in-noida-rave-party-case-says-there-is-not-even-1-percent-truth-in-this
ரேவ் பார்ட்டி சம்பந்தமாக தன் மீது பதியப்பட்ட வழக்கில் உண்மை இல்லை - பிக் பாஸ் வெற்றியாளர்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:39 PM IST

ஹைதராபாத்: ரேவ் பார்ட்டி தொடர்பாக பிக் பாஸ் ஓடிடி 2 வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் நொய்டா நகரில் நடைபெற்ற ரேவ் பார்ட்டி தொடர்பாகப் போதைப்பொருள் தடுப்புத் துறை வனத்துறை மற்றும் நொய்டா காவல் துறையினர் இணைந்து 5 நபர்களைக் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் யூடியூபருக்கு பாம்புகள் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும் 5 நபர்களைக் கைது செய்யும் போது பாம்புகள் மற்றும் பாம்புகளின் 20 மில்லி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

watch-elvish-yadav-denies-charges-against-him-in-noida-rave-party-case-says-there-is-not-even-1-percent-truth-in-this
ரேவ் பார்ட்டி சம்பந்தமாக தன் மீது பதியப்பட்ட வழக்கில் உண்மை இல்லை

மேலும், பார்ட்டி ஒன்றில் எல்விஷ் யாதவ் பாம்பைப் பிடித்து விளையாடுவது போன்ற காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி பிரிவுகள் 9, 39, 49, 50, 51 மற்றும் ஐபிசி பிரிவு 120பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்விஷ் யாதவ் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் விதமாக எல்விஷ் யாதவ் விடியோ ஒன்றை X பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தன் மீது போலியாகக் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் தனக்கு எதிராக ஏதேனும் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் அதற்குப் பொறுப்பேற்பதாகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டில் 1 சதவீதம் கூட உண்மையில்லை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பிப்பிள் பார் அனிமல் (People for Animals) அமைப்பைச் சேர்ந்தவர்கள் யூடியூபர் எல்விஷ் யாதவ் உட்படப் பலர் மீது புகார் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்விஷ் யாதவ் டெம்ப்டேஷன் ஐலண்ட் நிகழ்ச்சியில் அபிஷேக் மல்ஹானுடன் நடித்து வருவதாகவும், இந்த நிகழ்ச்சி நவம்பர் 3 இன்று ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வணக்கம் இந்தியா.. Indian is back" - வெளியானது இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.