ETV Bharat / bharat

உ.பி.யில்., எரிந்து கிடந்ததா ஈவிஎம் மெஷின் வாக்குச்சீட்டுகள்? - உத்தரப்பிரதேச தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குச்சீட்டுகள், பாதுகாப்பு அறைக்கு பின்பக்கத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஈவிஎம் மிஷின்
ஈவிஎம் மிஷின்
author img

By

Published : Mar 4, 2022, 9:44 PM IST

பஸ்தி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டமாக திட்டமிட்டப்பட்டது. ஏற்கெனவே, ஆறு கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் காவலர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று (மார்ச் 3) ஆறாம் கட்ட வாக்குப்பதிவிற்குப் பின்னர், இயந்திரங்கள் மண்டி சமிதி எனும் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மண்டி சமிதி பாதுகாப்பு அறையின் பின்புறம், இயந்திரத்தின் வாக்குச்சீட்டுகள் வெளியே சிதறிக்கடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, விசாரிக்க மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். வெளியே கிடந்த வாக்குச்சீட்டுகள், 1000-க்கும் மேலான வரிசை எண்களை (Serial Number) கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. சில சீட்டுகள் எரிந்த நிலையில், கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள் ஏற்பாடு - ரஷ்ய ராணுவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.