ETV Bharat / bharat

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: கடைசி தேதி நீட்டிப்பு! - கடைசி தேதி நீட்டிப்பு

ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு
author img

By

Published : Mar 22, 2023, 5:22 PM IST

டெல்லி: இந்திய குடிமகன் என்பதற்கான முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் அட்டை. அதுமட்டுமன்றி மத்திய அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெறவும் ஆதார் அட்டை அவசியமாகிறது. பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, இது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பான தேர்தல் திருத்த சட்ட மசோதா மக்களவையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து வந்தனர்.

2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒரு நபரின் பெயர் பல்வேறு தொகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை இதன் மூலம் அறிந்து, அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2022ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க கடைசி தேதி 2023 ஏப்ரல் 1 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு-என்ன செய்ய வேண்டும்?:

* தேசிய வாக்காளர் சேவை இணையத்துக்குள் (NVSP) செல்ல வேண்டும்

* முகப்பு பகுதிக்கு சென்ற உடன் லாக்-இன் செய்ய வேண்டும்.

* வாக்காளர் பட்டியல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

* அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்த பின், ஆதார் எண்ணை குறிப்பிடவும்

* பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது இ-மெயிலுக்கு OTP எண் வரும்

* OTP எண்ணை நிரப்பியவுடன், வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும்.

இதற்கிடையே பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய கால அவகாசம் மார்ச் 31ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இணைக்க தவறினால் பான் எண் செயல் இழந்துவிடும் என கூறப்படுகிறது. எனவே பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்! 6 பேர் கைது - ஆம் ஆத்மிக்கு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.