டெல்லி: கரோனாவிற்கு எதிராகப் போராடும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் விமானப்பணியாளர்களைக் கொண்டு 'விஸ்டாரா' என்னும் தனியார் நிறுவனம் வானில் தனது பயணத்தை நேற்று மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக யூகே 963 எனும் எண் கொண்ட 'விஸ்டாரா' சிறப்பு விமானம், முதன்முறையாக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே இவ்வாறு இயக்கப்பட்டது.
அப்போது அந்த விமானத்தை இயக்கிய விமானி மற்றும் விமானப்பணியாளர்கள் கொண்ட குழுவினர், மீண்டும் மும்பையில் இருந்து டெல்லிக்குச் செல்லும் மற்றொரு விமானத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றனர்.
இனிவரும் காலங்களிலும் முழுமையான இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பணியாளர்களைக் கொண்டு இயக்கப்படும் என அந்த விமான நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
'விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி, தடுப்பூசி செலுத்தப்பட்ட விமானி மற்றும் விமானப்பணியாளர்களைக் கொண்டு விமானத்தை இயக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்' என விஸ்டாராவின் தலைமை வணிக அலுவலர் வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விமான நிறுவனம், தனது அனைத்துப் பணியாளர்களிடத்திலும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸையாவது போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான விமானப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதனின் ஆபாச ஆடியோவைக் கேட்டு வெறுப்பான நீதிபதி; தடுமாறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்