ETV Bharat / bharat

இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு:இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா - இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது

இந்தியா-சீனா எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறிய விவகாரத்தில், மோடி ஆட்சி இருக்கும் வரை இந்தியாவிலிருந்து ஓர் அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 14, 2022, 11:34 AM IST

Updated : Dec 14, 2022, 1:38 PM IST

இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு:இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா

ஹைதராபாத்: அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா சீனா எல்லையிலான தவாங்க் பகுதியில் கடந்த டிச.9 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன இராணுவத்தினர் மீது இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து அத்துமீறியவர்களை துரத்தியடித்தனர். இந்நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் PLA படைகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது ஸ்பைக் பேட்டன்கள், கேடயங்களுடன் LAC க்குள், இந்திய ராணுவத்தினர் அவர்களின் ஊடுருவலை தாக்குதல் நடத்தி துரத்தியது இந்த வீடியோ பதிவின் மூலம் தெரிவந்ததுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்குள் சீனாவின் ஊடுருவல் முறிடியக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வீடியோ கடந்த 2020-ம் ஆண்டுவாக்கில் கால்வான் மோதலுக்கும் பிந்தையது எனக் கூறப்பட்ட நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் எல்லைப் பகுதியில் கடந்த டிச. 9ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் வெடித்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று (டிச.13) பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ வீரர்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால், அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி முறியடிக்கப்பட்டது என விளக்கமளித்தார்.

மேலும், யாங்ட்ஸி எல்லைப்பகுதியில் நிலவும் சீனா கடந்த டிச.9-ல் தன்னிச்சையாக மாற்ற முயன்றதோடு, இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றது. இதை இந்திய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பெரிய அளவில் காயங்கள், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சீனாவின் அத்துமீறலை இந்திய ராணுவ வீரர்கள் உறுதியோடு திறம்பட எதிர்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'சீன தூதரகத்திடமிருந்து முறைகேடாக ராஜீவ்காந்தி அறக்கட்டளை பணம் பெற்றது குறித்த கேள்வியை திசை திருப்பவே இந்த எல்லைப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சி இருக்கும் வரையில் இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட யாராலும் கைப்பற்ற முடியாது. இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது பாராட்டுகள்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்போது யார் பப்பு.? எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி.. அனல் பறந்த விவாதம்..

Last Updated : Dec 14, 2022, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.