இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை சீராக வைக்கவும் இந்த மருந்து உதவும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - மத்திய அரசு