ராஜஸ்தான்: ஜெய்சால்மரில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தின் எல்லைச் சுவருக்கு அருகில் இரண்டு நாள்களில், கிராம மக்கள் 13 மான் சடலங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர், அவற்றில் சிலவற்றின் உடல்கள் மற்றும் சிலவற்றின் கொம்புகள் மட்டுமே காணப்பட்டன. இந்த உயிரிழப்புக்கு சோலார் நிறுவனமே காரணம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கிராம மக்களை தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனமான 'போகரன் ஸ்ரீ ஜம்பேஷ்வர் சுற்றுச்சூழல் மற்றும் லைஃப் டிஃபென்ஸ் ஸ்டேட் சன்ஸ்தா' அலுவலர்கள் குழு தனியார் சோலார் ஆலையை சுற்றி கணக்கெடுத்த போது ஐந்து இறந்த மான்களைக் கண்டுபிடித்துள்ளது. சோலார் நிறுவன ஊழியர்கள் அவர்களை நிறுவன வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து என்ஜிஓ மற்றும் கிராம மக்கள் சோலார் நிறுவனம் மீது புகார் அளித்தனர்.
என்ஜிஓ அமைப்பின் மாவட்டத் தலைவர் சதாராம் கிலேரி, நிறுவனத்தின் வளாகத்திற்குள் தேடுதல் நடவடிக்கையை கோரியுள்ளார். ஈடன் சோலார் ஆலையின் சுற்றுப்புறத்தில் செவ்வாய்க்கிழமை இறந்த ஆறு சிங்காரா மான்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். உயிரிழந்த மானின் உடற்கூராய்வு புதன்கிழமை நடைபெற்றது.
இது குறித்து என்ஜிஓ அமைப்பின் மாவட்டத் தலைவர் சதாராம் கிலேரி கூறுகையில், "மான் சடலங்கள் பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு குழு இங்கு வந்தது. கடந்த ஜூன் 21 அன்று ஆறு மான்கள் இறந்து கிடந்தன. பின்னர் இன்று (ஜூன் 23), குழு நிறுவன வளாகத்திற்குள் செல்ல முயன்றபோது, நிறுவன ஊழியர்கள் தடுத்தனர்" என அவர் கூறினார்.
நிறுவன ஊழியர்கள் வனக் காவலர்களை உள்ளே செல்லக் கூட அனுமதிக்கவில்லை என்றும், அவர்களையும் புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 4 மாணவர்களுக்காக 2 ஆசிரியர்களுடன் இயங்கும் அரசுப் பள்ளி... எங்கே தெரியுமா?