டீக்கடை நடத்திய வருமானத்தில் உலகம் சுற்றும் ஜோடியாக விளங்கி, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தவர்கள் விஜயன் - மோகனா தம்பதி.
விஜயனும் மோகனாவும் கடந்த 14 ஆண்டுகளில் 25 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். டீக்கடையில் கிடைக்கும் சிறு வருமானத்தில் வரும் பணத்தைச் சேமித்து, முடிந்த போதெல்லாம் தம்பதியாகவே பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இவர்கள், பல விருதுகளையும் வென்றுள்ளனர்.
இந்நிலையில் 71 வயதாகும் விஜயன் மாரடைப்பால் இன்று (நவ.19) உயிரிழந்தார். முன்னதாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணத்தை நிறுத்திவைத்திருந்த விஜயன் - மோகனா தம்பதி, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் ரஷ்யாவுக்குச் சென்று சமீபத்தில்தான் திரும்பினர்.
எர்ணாகுளத்தில் குடியேறிய பிறகே விஜயனும் மோகனாவும் தங்களது இந்த உலகம் சுற்றும் பயணத்தைத் தொடங்கினர். தனது பயணங்களிலிருந்து தாங்கள் பெற்ற பல தகவல்களையும் திரட்டி, கேரள சுற்றுலாத் துறையுடன் விஜயன் பகிர்ந்துள்ளார்.
மேலும், சமீபத்தில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸை சந்தித்து கேரளாவில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் விஜயன் வழங்கியிருந்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாய சட்டங்கள் வாபஸ், பாஜகவுக்கு பலன் அளிக்காது- லாலு பிரசாத் யாதவ்!