ETV Bharat / bharat

விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி சொத்து பிரான்ஸ் நாட்டில் பறிமுதல்! - விஜய் மல்லையா சொத்து அமலாக்கத்துறை

பிரான்ஸ் நாட்டில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Vijay Mallya
Vijay Mallya
author img

By

Published : Dec 4, 2020, 9:05 PM IST

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா சுமார் ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் நாட்டிற்கு தப்பியோடினார்

பிரிட்டனில் அடைக்கலம் புகுந்துள்ள பொருளாதார குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், அவரின் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து பிரான்ஸ் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

அமலாக்கத் துறை அலுவலர்களின் கோரிக்கை பேரில் பிரான்ஸ் நாட்டு அலுவலர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். லண்டனில் பிணையில் உள்ள மல்லையா இந்தியா திரும்புவதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. அந்நாட்டின் விதிகளின்படி நீதிமன்ற ஒப்புதலுக்குப் பின்னரே அவர் இந்தியா அழைத்துவரப்படுவார்.

இதையும் படிங்க: தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.