ETV Bharat / bharat

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் "ஜன கன மன"...!

author img

By

Published : Mar 29, 2022, 6:40 PM IST

இயக்குனர் பூரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணையும் "ஜன கன மன" திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Vijay
Vijay

தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது க்யூட்டான நடிப்பால் பெண் ரசிகர்களை அதிகளவில் சேர்த்தவர். இவர் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் "லைகர்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். வரும் ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு "ஜன கன மன" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுபோல போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களின் வேலையையும், நாட்டிற்காக மேற்கொள்ளும் தியாகத்தையும் மையப்படுத்தி படம் இருக்கலாம் எனப் போஸ்டர் மூலம் தெரிகிறது. இப்படம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெரிவித்தார். இந்தப் படம் அனைத்து இந்தியர்களின் மனதை தொடும் வகையில் இருக்கும் என்றும், இப்படத்தின் தன்னுடைய கதாபாத்திரம் இதுவரை தான் நடிக்காதது - இதற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டாதெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.