ETV Bharat / bharat

உ.பி., அரசு ஒரு குழந்தை விதியை நீக்க வேண்டும் - விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை! - விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை

உத்திரப்பிரதேச அரசு, அதன் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவில் இருந்து, ஒரு குழந்தை விதிமுறையை நீக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா
மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா
author img

By

Published : Jul 12, 2021, 11:04 PM IST

டெல்லி: உத்திரப்பிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் உள்ள ஒரு குழந்தை கொள்ளை விதிமுறையை நீக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இது பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்ற தெரிவித்துள்ளது.

அதேபோல, உத்திரபிரதேச அரசின் மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்துதல், நலவாழ்வு) மசோதா 2021 இல் உள்ள, பெற்றோருக்கு பதிலாக குழந்தைகளுக்கு தண்டனை அல்லது வெகுமதி வழங்குதல் என்ற முரண்பாட்டை நீக்க வேண்டும் என இந்து அமைப்புகள், யோகி ஆதித்யநாத் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

புதிய வரைவு மசோதா

உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு, புதிய வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவை பொது வெளியில் வெளியிட்டு, உத்திரபிரதேச மாநில சட்ட ஆணையம், பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது.

இப்புதிய வரைவு குறித்து, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர், அலோக் குமார் உத்திரப்பிரதேச மாநில சட்ட ஆணையத்திற்கு தனது பரிந்துரைகளைக் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த வரைவின் முன்னுரை இது, மக்கள் தொகையை , உறுதிப்படுத்த இரண்டு குழந்தை விதிமுறையை மேம்படுத்தவுமான மசோதா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பொருளை விஸ்வ இந்து பரிஷத் ஏற்றுக்கொள்கிறது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள், உத்திரபிரதேசத்தின் மொத்த கருவுறும் விகிதத்தை, 1.7 விகிதமாக குறைக்க முற்படும் மசோதாவின் நோக்கத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தொகை ஸ்திரத்தன்மை அடைவதற்கு இரண்டு குழந்தை கொள்கை விரும்பத்தக்கதாக கருதப்படுகிறது. ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையில், சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டுக்கும் மேலாக இருக்கும் சமூகத்தில், மக்கள் தொகை உறுதிப்படுத்தப்படுகிறது.

ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்

உழைக்கும் மக்கள் தொகைக்கும் , அவர்களை சார்ந்திருக்கும் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை கொள்கை உழைக்கும் ஒருவர் இரண்டு பெற்றோரையும் நான்கு தாத்தா பாட்டியையும் கவனிக்கும் நிலையை உருவாக்கும். 1980களில் சீனா ஒரு குழந்தை கொள்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க மூன்று தசாப்தங்களுக்குள் அதைத் திரும்ப பெற வேண்டி இருந்தது.

பல மாநிலங்களில், பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை வெகுவாக குறைந்து வரும் அஸ்ஸாம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இது பெரும் ஆபத்தாகி வருகிறது.

இந்த மாநிலங்களில் இந்துக்களின் டிஎஃப்ஆர் மாற்று விகிதம் 201 விட குறைந்துள்ளது. ஆனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அஸ்ஸாமில் 3.16 ஆகவும், கேரளாவில் 2.33 ஆகவும் உள்ளது. இரண்டு மாநிலங்களில் இவ்வாறு ஒரு சமூகம் குறைந்தும் ஒரு சமூகம் விரிவடைந்தும் வருகிறது. இந்த சூழ்நிலைக்கு உத்திரப்பிரதேசம் தள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களுடன் கரோனா தடுப்பூசி: தமிழிசையின் அடடே விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.