குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, டிசம்பர் 28ஆம் தேதிமுதல் மூன்று நாள் பயணத்தை மேற்கொள்வதாக அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (டிசம்பர்28) அதிகாலை வெங்கையா நாயுடு விஜயவாடா விமான நிலையம் வந்தடைந்தார்.
விஜயவாடா மாவட்ட அலுவலர்கள் வெங்கையா நாயுடுவைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், அமைச்சர் வேலம்பள்ளி சீனிவாச ராவ், தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி, மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர்.
கிருஷ்ணா மாவட்டம் அக்குருவில் உள்ள ஸ்வர்ணபாரத் அறக்கட்டளைக்கு ஓய்வெடுக்க இன்று (டிசம்பர் 28) செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சூரம்பள்ளியில் உள்ள மத்திய நிறுவனம் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனத்தில் (சிஐபிஇடி) உள்ள மாணவர்களுடன் உரையாட உள்ளார்.
பின்னர் மாலை ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின்கீழ் படித்த முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்குவார். மூன்றாவது நாளாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூரு புறப்படுகிறார்.