ETV Bharat / bharat

இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி தமிழ்நாடு ஆயர்களுக்கு கடிதம் - TN Catholic priests

இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, தமிழ்நாடு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பங்குதந்தையர்கள் தங்களின் சொந்த நலனுக்காக தாங்களாகவோ, அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வணிகம் அல்லது வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடிதம்
கடிதம்
author img

By

Published : Oct 25, 2021, 6:34 PM IST

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, அக்.8 ஆம் தேதி தமிழ்நாடு ஆயர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "என்ஜிஓக்களாக பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகளில் இருந்து வரும் நிதி ஆதாரங்கள் கத்தோலிக்க பங்குதந்தையர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், அரசியல் செல்வாக்கை வளர்த்து கொள்ளவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அதில் இவ்வாறான நடைமுறைகள் கேனான் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. கேனான் சட்டம் 286 இன் படி, அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பங்குதந்தையர்கள் தங்களின் சொந்த நலனுக்காக தாங்களாகவோ, அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வணிகம் அல்லது வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள இது சரியான தருணம். அறக்கட்டளையின் மூலம் கிடைக்கும் நிதியை பங்குதந்தையர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமே தவிர, தங்களின் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை வழிநடத்துவதற்கு வல்லுநர்களைக் கொண்ட குழுவை உருவாக்குவதற்கான ஆலோசனைகளும் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ரூ.15 கோடி கருவூல அலுவலகக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.