டெல்லி: தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் (Sleeper Coach) கூடிய வந்தே பாரத் ரயில், அடுத்த ஆண்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் தற்போது இருக்கை வசதி மட்டும் உள்ள நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு படுக்கை பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
-
Concept train - Vande Bharat (sleeper version)
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Coming soon… early 2024 pic.twitter.com/OPuGzB4pAk
">Concept train - Vande Bharat (sleeper version)
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2023
Coming soon… early 2024 pic.twitter.com/OPuGzB4pAkConcept train - Vande Bharat (sleeper version)
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2023
Coming soon… early 2024 pic.twitter.com/OPuGzB4pAk
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது X தளத்தில் வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் மாதிரிப் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத்தின் கான்செப்ட் படங்கள். 2024ஆம் ஆண்டு வரவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னல் மற்றும் ஏசி வசதியுடன் இந்த ரயிலின் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் மேற்கூரையில் சிறந்த அழகிய வேலைப்பாடுகளுடன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேல் படுக்கையில் ஏறுவதற்கு 6 படி ஏணி அமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில், 10 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது. வடிவமைக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகளின் மாடல்களும் வருகிற அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தயாராக உள்ளது.
உலகத் தரத்தில் தோன்றும் இந்த வடிவமைப்பானது, ஐசிஎஃப் கொடுத்த தரவுகளைப் பெற்று, பிஇஎம்எல் நிறுவனம் படுக்கைப் பெட்டிகளுக்கான உட்புற வடிவமைப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் முழு மாதிரி பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் (BEML) தொழிற்சாலையில் இருந்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியில் தயாராகவுள்ளது என தகவல் வெளியான நிலையில், வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி (ஸ்லீப்பர் கோச்) கொண்ட மாதிரிப் படங்களை மத்திய அமைச்சர் வெளியிட்டது அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: Chepauk stadium: இந்திய கிரிக்கெட்டின் 'லக்கி சார்ம்' சேப்பாக்கம் மைதானம்! அப்படி என்ன இருக்கு?