குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.ஏ. பட்டதாரி கஷ்மா பிந்து (24). இவர் தற்போது வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பிந்துவிற்கு திருமணம் நடைபெறவிருக்கிறது; சற்று வித்யாசமாக. மணமகன் என யாரும் கிடையாது. பிந்து தன்னை தானே விரும்பி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
அதில், ஜூன் 11 ஆம் தேதி தன்னுடைய பெற்றோர் ஒப்புதலுடன் இந்து முறைப்படி தன்னைத் தானே திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து இந்தப் பெண்ணின் முடிவிற்கு வதோதராவின் முன்னாள் துணை மேயரான சுனிதா சுக்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இளம்பெண்ணின் திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அந்த இளம்பெண் திருமணம் செய்யவிருந்த கோயில் எங்கள் பகுதியில் உள்ளது. இந்து முறைப்படி ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க இயலாது. இந்து சாஸ்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கஷ்மா பிந்துவின் ஆதார் அட்டையில் சரியான தகவல்கள் இல்லாதது பெரிய சர்சையை கிளப்பியுள்ளது. இதற்க்கு காரணம் அவருடைய ஆதார் அட்டையில் அவருடைய பெயருக்குப் பதிலாக ”செளமியா துபே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடைய உண்மையான அடையாளம் எது, எதற்காக தன்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும். என்பது குறித்த தொடர் விசாரணை நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே இவருடைய சுய திருமணம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஆதார் அட்டையில் மாறுபட்ட தகவல்களைக் இருப்பது சந்தேகத்தை தூண்டியுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மையான தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தன்னைத் தானே விரும்புபவள்.. இவள்..!