லக்னோ: உத்தரப் பிரேதேச மாநிலம் பால்ராம்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராகேஷ் சிங் நிர்பிக்கின் வீட்டில் நேற்று (நவம்பர் 29) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ராகேஷ் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், எவ்வாறு விபத்து நேர்ந்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது ராகேஷின் மனைவி, குழந்தைகள் உறவினர்கள் வீட்டில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடைபெற்றுவருவதாக, காவல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த பத்திரிகையாளிரன் மனைவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், அம்மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் அவருக்கு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவர் உள்பட இருவர் கைது