ETV Bharat / bharat

இறந்த சகோதரி உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சகோதரர்..! ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த அவலம்..

Youth takes sister dead body on bike: உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் மருத்துவமனை அதிகாரிகளால் ஆம்புலன்ஸ் வழங்க முடியாததால், இறந்த சகோதரியின் உடலை சகோதரர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Uttar Pradesh man takes young sister dead body home on bike after not getting ambulance
இறந்த சகோதரியின் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற சகோதரர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 9:41 AM IST

உத்தரபிரதேசம்: அவுரியா மாவட்டம் நவீன் பஸ்தி பகுதியில் வசித்து வருபவர் பிரபால் பிரதாப் சிங். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 8) இவரது இளைய மகள் அஞ்சலி (20) தண்ணீர் சூடாக்க வைத்திருந்த ஹீட்டரின் கம்பியைத் தவறுதலாகத் தொட்டதால் அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

  • वीडियो औरैया के बिधूना CHC के सामने का है। एक बिलखता भाई अपनी बहन के शव को बाइक पर रखने का असफल प्रयास कर रहा है। दो लोग उसकी मदद भी कर रहे हैं।

    जानते हैं, यह क्यों हुआ? क्योंकि इसे मदद के लिए एम्बुलेंस नहीं मिली।

    एम्बुलेंस न मिलने से समय पर अस्पताल न आने के कारण या किसी न… pic.twitter.com/e0BX5sPnaF

    — UP Congress (@INCUttarPradesh) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பின், பிதுனாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட அஞ்சலியைப் பரிசோதித்த இரண்டு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அஞ்சலி இறந்த செய்தியைக் கேட்டு அவர் சகோதரர் மனம் உடைந்து கதறி அழுதுள்ளார். மேலும், அஞ்சலியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலனஸை அழைத்த போது, அவுரியா பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அஞ்சலியின் சகோதரி மற்றும் சகோதரர், அஞ்சலியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து துப்பட்டாவால் கட்டியுள்ளனர். சுகாதார மையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் யாரும் அவர்களுக்கு உதவவில்லை என்பதால் மனமுடைந்த அஞ்சலியின் சகோதரர் மற்றும் சகோதரி உடற்கூராய்வு செய்யாமல் அஞ்சலியின் உடலை தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஷிஷிர் குமார் வர்மா கூறுகையில், பிதுனாவில் அமைந்துள்ள சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். அவிச்சல் பாண்டே மற்றும் அங்கு நியமிக்கப்பட்ட டாக்டர். கிரிபரம் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை உத்தரபிரதேச சுகாதார அமைச்சரும், துணை முதலமைச்சருமான பிரஜேஷ் பதக்கின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் வர்மா கூறினார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இறந்தவரின் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், உத்தரபிரதேசம் காங்கிரஸ் தலைமை தனது X தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து பாஜக அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது.

அந்த பதிவில், “இந்த வீடியோ பிதுன்யாவில் உள்ள சுகாதார மையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த சகோதரர் தங்கையின் மரணத்தால் அழுது கொண்டே தனது இருசக்கர வாகனத்தில் உடலை ஏற்ற முயற்சிக்கிறார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தாலும், சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமலும் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் யாராவது இறக்கின்றனர். ஆனால், இவையெல்லாம் பதக் கண்ணிற்குத் தெரியாது. அந்த சகோதரி தனது சகோதரனுக்கு ராக்கியை கட்டியபோது தனது தங்கைக்குப் பாதுகாப்பாக இருப்பேன் என நினைத்திருப்பான். ஆனால் தற்போது தங்கையைக் காப்பாற்ற முடியவில்லையே என மனமுடைந்திருப்பான்” எனப் பதிவிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் அர்ச்சகர் நியமன அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.