டெல்லி : கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடந்த யுபிஎஸ்சி மெயின்ஸ் எனப்படும் முதன்மை தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுமாறு யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் அடுத்த 15 நாட்களில் இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மற்ற மத்திய பணிகளுக்கான நேர்முக தேர்வு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து தேர்வர்களும் விரிவான விண்ணப்பப் படிவம்-2ஐ யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. அதேபோல், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, இறுதி முடிவுகள் வெளியான நாளில் இருந்து 15 நாட்களுக்குள் அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல்களும் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு அதே இணையதளத்தில் இருக்கும் என தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : ஆப் மூலம் கடன் வாங்கும் நண்பர்களே உஷார்! முதல்ல இத படிங்க!