லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இந்திரா நகரில் உள்ள சி பிளாக்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஐஜி தினேஷ் சந்திர பாண்டே வசித்து வருகிறார். இவருடன் இவரது மனைவி அருணா மற்றும் மகன் ஷஷாங்க் ஆகியோரும் உடன் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில் நேற்று (அக்-22)இரவு 11 மணிக்குத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்த தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காயமடைந்த மூவரையும் மீட்டு அருகில் இருந்த லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பாண்டே சிகிச்சைப் பலனின்றி உயிரிந்தார். அவரது மனைவி மற்றும் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஜிப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், ஏசியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.
இதையும் படிங்க:கோவையில் வெடித்து சிதறிய கார்... ஒருவர் உயிரிழப்பு... டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு...