லக்னோ : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் கைரானா தொகுதியில் மக்களோடு மக்களாக வீடு வீடாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அங்குள்ள ஆசிரியர்கள் காலனி உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டரில் அமித் ஷா, “2014ஆம் ஆம் ஆண்டு இங்கு வந்தேன். தற்போது பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தலைமையில் இப்பகுதி சாலைகள், விமான நிலையம், மின்சாரம், அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி என வளர்ச்சி கண்டிருப்பதை பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா இங்கு பாஜக தலைவராக இருந்த போது வந்துள்ளார். அதன்பின்னர் தற்போதுதான் கைரானா பகுதிக்கு வந்துள்ளார். 403 இடங்கள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்.10 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : UP polls: 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை- அகிலேஷ் வாக்குறுதி!