ETV Bharat / bharat

உ.பி. அமைச்சரின் கார் ஓட்டுநர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்; காவல் துறை விசாரணை - அமைச்சரின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்

உத்தரப்பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சரின் கார் ஓட்டுநர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி அமைச்சரின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்  ; காவல்துறை விசாரணை

author img

By

Published : Sep 22, 2022, 10:00 PM IST

லக்னோ(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்திலிருந்து வியாழக்கிழமை, பஞ்சரான காரில் ஓர் அமைச்சரின் கார் ஓட்டுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறந்தவர் உத்தரப்பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவின் ஓட்டுநர் என்றும், நேற்று(செப்.21) முதல் அவர் வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது கவுடம்பள்ளி காவல் நிலைய காவல் துறையினர் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேநேரம், இறந்தவரின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.

காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, இறந்தவர் பச்ரவான் ரேபரேலியைச் சேர்ந்த ராஜேஷ் திவேதி (45). இவர் கவுதம்பள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தில்குஷா காலனி கிராசிங் அருகே வாகனத்தில் இறந்து கிடந்துள்ளார்.

ராஜேஷ், தொழிலில் டிரைவராக இருந்து, டிராவல்ஸ் ஏஜென்சியில் வாகனம் ஓட்டி வருகிறார். ராஜேஷின் மகன் சுதன்ஷு கூறுகையில், தனது தந்தை யோகி அரசில் அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவின் டிரைவராக இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக அவருக்கு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, ​​லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் வசித்து வந்துள்ளார்.

புதன்கிழமை மாலை, ராஜேஷுக்கு யாரோ ஒருவரிடமிருந்து அழைப்புவந்ததாகவும், அவர் ஏதோ ஒரு இடத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றிலிருந்து ராஜேஷின் போனில் அழைப்பு வந்தபடியே இருந்துள்ளது.

இந்நிலையில், காரில் ராஜேஷின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சராகி இருந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் குழுவினர், வாகனத்தில் இருந்த கைரேகை மாதிரிகளை எடுத்துள்ளனர்.

கவுதம்பள்ளி ஆயுவாளர் ஷிவ் சரண்லால் கூறுகையில், ”உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொலையில் சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.

இதையும் படிங்க: 'காத்து வாக்குல ரெண்டு காதல்' - மனைவியின் உதவியுடன் காதலியை கரம்பிடித்த காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.