நாட்டில் கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகிவருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, யோகி ஆதித்யநாத்தின் அலுவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "முதலமைச்சர் அலுவலக அலுவலர்கள் சிலருக்கு கரோனா இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. என்னுடன் அவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது பணியை இணைய வழியில் தொடங்கவுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.