லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் ஆசிரியையை திட்டமிட்டு கிண்டல் செய்தும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தும், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த 12ஆம் வகுப்பு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வீடியோவில் மாணவர்கள் ஆசிரியை வழிமறித்து கிண்டல் செய்வதும், ஆசிரியை அவர்களிடமிருந்து விலகி செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த மாணவர்கள் பலமுறை அந்த ஆசிரியைக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளனர்.
அவரும் பல முறை எச்சரித்துவந்துள்ளார். இருப்பினும் மாணவர்கள் கேட்கவில்லை என்பதால், வேறு வழியின்றி போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாணவர்கள் நேற்று (நவம்பர் 26) கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் கித்தோர் சுசிதா சிங் தரப்பில், மாணவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திரையுலக பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை..? கோவாவில் கடத்தல் மன்னன் பாலமுருகன் கைது..!